அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி புரிவதற்கு பி ஏ, பி எஸ் சி , பிகாம் போன்ற படிப்புகளை படித்தவர்கள் மற்றும் இது குறித்த மேற்படிப்புகளை படித்து முடித்தவர்கள் அரசு தேர்வுகளை எழுதி பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரியக்கூடிய சூழல் இருந்து வருகிறது. இந்த சூழலில் சிறிது மாற்றங்களை அரசு முன்னெடுத்து இருக்கிறது.
அதன்படி, இன்ஜினியரிங் படித்த மாணவர்களும் இனி அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரியலாம் என்றும் இதற்கான ஆசிரியர் தகுதி தேர்வுகளை எழுதுவதற்கு இவர்களுக்கும் தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் குரூப் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய தகுதி தேர்வு எழுதி வந்த நிலையில் இனி இன்ஜினியரிங் மாணவர்களும் எழுதலாம் என தெரிவித்திருப்பது இன்ஜினியரிங் முடித்த மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அறிவியல் இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள் நடத்தலாம் என்றும் இதற்கு முறையாக ஆசிரியர் தகுதி தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று அதன் பின் மற்ற ஆசிரியர்களை போலவே இவர்களும் பணியமர்த்தப்படுவார் என்று தமிழக அரசு தரப்பில் உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்திருக்கிறார்.