IPL : தற்போது தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய கிரிக்கெட் போட்டி தொடர் எதுவென்றால் அது ஐபிஎல் தொடர் தான். ஐபிஎல் 2025 காண போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. மேலும் தற்போது மும்பை அணியில் முதல் போட்டியில் கார்த்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக களம் இறங்குவார் என கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக முதல் மூன்று போட்டிகளில் ரியான் பராக் விளையாட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விக்கெட் கீப்பிங் இதற்கான உடற்பகுதி பெறாததால் சஞ்சு சாம்சன் முதல் மூன்று போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே களமிறக்கப்படுவார் என கூறப்பட்டதால், அந்த முதல் மூன்று போட்டிகளிலும் ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.





