Cricket : நாளை முதல் போட்டியாக நடைபெற உள்ள பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணி இடையிலான இதுவரை நடந்த போட்டியின் விவரம்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய தொடர்பான ஐபிஎல் தொடர்பு முதல் போட்டி நாளை கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டியாக கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோத உள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் விவரம் குறித்து பார்க்கலாம்.
இதுவரை கொல்கத்தா மற்றும் பெங்களூர் இரு அணிகளும் நேருக்கு நேர் 34 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 20 போட்டிகளில் கொல்கத்தா அணியும், 14 போட்டிகளில் பெங்களூர் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிகபட்ச ரன் பெங்களூர் அணி 221, கொல்கத்தா அணி 222 ரன்கள். குறைந்த பட்சமாக பெங்களூர் 49 ரன்கள், கொல்கத்தா 84 ரன்கள்.
இதுவரை அதிகபட்ச ரண்களாக பெங்களூர் அணியில் கிரிஸ் கெயில் 606 ரன்களும், டி வில்லியர்ஸ் 475 ரர்களும், கொல்கத்தாணியில் கம்பீர் 475 ரன்கள், பிரண்டன் மெக்கல்லம் 411 ரன்களும் எடுத்துள்ளனர். அதிக விக்கெட்களாக சுனில் நரைன் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். யுஸ்வேந்திர சாஹல் 19 விக்கெட்டுகளும், வினை குமார் 17 விக்கெட்களும், ரசல் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். நாளை நடைபெற உள்ள போட்டியில் எந்த அணிக்கு வெற்றி??





