LSG அணிக்கு வந்த புதிய சிக்கல்!! ரீடெயின் செய்த வீரர் விலகல்!! புதிய வீரர் இவர்தான்!!

New problem for the LSG team

CRICKET: இந்த வருடம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் லக்னோனில் ரிட்டன் செய்த முக்கிய வீரர் காயம் காரணமாக வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கும் ஒரு தொடர் எதுவென்றால் அது ஐபிஎல் தொடர் தான். நாளை மறுநாள் இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் இரு அணிகளும் மோத உள்ளது. இந்நிலையில் பல அணிகளில் கேப்டன் மாற்றம் வீரர் விலகல் என பல குழப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் லக்னோ அணியில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.

இந்த ஆண்டு லக்னோ ரிஷப் பண்ட் டை ரூ. 27 கோடிக்கு வாங்கியது. ரீடெயின் செய்த வீரர்கள் பட்டியலில் நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க யாதவ், மோஷின் கான், ஆயுஷ் பதோனி என ஐந்து வீரர்களை ரீடைன் செய்தது லக்னோ அணி. இதில் முக்கிய வீரரான வேகபந்துவீச்சாளர் மோஷின் கான் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு பதிலாக இந்த தொடரில் ஷர்த்துல் தாகூர் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. வேகபந்துவீச்சாளர் மோசின் கான் அணியில் பங்கேற்காதது லக்னோன அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு இணையாக ஷர்த்துல் தாகூர் பந்துவீச்சை வெளிப்படுத்துவாரா என காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram