KKR vs RCB மேட்ச் இன்று நடைபெறுமா!! கொல்கத்தாவில் ஆரஞ்சு அலாட்.. வேதனையில் ரசிகர்கள்!!

2008 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணியானது மோத இருக்கிறது. இது இரண்டு அணி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக அமைந்திருக்க கூடிய சூழலில் இன்று மேட்ச் நடைபெறக்கூடிய கொல்கத்தாவிற்கு ஆரஞ்சு அலாட் விடுக்கப்பட்டிருக்கிறது.

 

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மார்ச் 22 ஆகிய இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் நேற்று கொல்கத்தாவில் கனமழை பெய்து இருக்கிறதா. கொல்கத்தா கிரிக்கெட் மைதானம் தார்பாய்களால் மூடப்பட்டிருந்த நிலையிலும் இன்று ஆரஞ்சு அலாட் கொடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களை வேதனை அடைய செய்வதாக அமைந்துள்ளது. காரணம் இது ஐபிஎல் இன் முதல் போட்டி.

 

ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கே கே ஆர் மற்றும் ஆர்சிபி அணி இடையில் மிகப்பெரிய வித்தியாசத்தில் கே கே ஆர் அணி ஆர் சி பி அணியை வீழ்த்தியது. அதற்கான பதிலடியை இந்த ஆண்டு ஆர் சி பி கொடுக்கும் என ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்த நிலையில் மேட்ச் நடக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

 

எனினும் இரவு 10.56 மணி வரை போட்டியை நடத்துவதற்காக அம்பையர்கள் காத்திருப்பர் என்றும் இரவு 10:56 க்கு மழை நின்றுவிட்டால் மேட்ச் ஆனது 5 ஓவர்களாக விளையாடப்படும் என்று ஒருவேளை அதற்கு பின்னும் மழை நிற்கவில்லை என்றால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram