உங்களுக்கு அல்சர் பிரச்சனையா?? இத ட்ரை பண்ணி பாருங்க!!

பெப்டிக் அல்சர் என்பது வயிறு அல்லது சிறுகுடலின் மேல் பகுதியான சிறுகுடலின் புறநானியில் ஏற்படும் ஒருவகை திறந்த புண்ணாகும். வயிற்றுப்புண் இருந்தால் அது இரைப்பை என்றும் கூறுவர். குடல் புண் என்பது டூடெனினத்தில்  இருப்பதனால் அது டூட்டெனில் அல்சர் என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது.

அதற்கான காரணங்கள் பொதுவாகவே உடலில் ஏற்படும் காரணமாக பெரும்பாலான மக்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. மேலும் வெறும் வயிற்றில் எச்சல் அதிக பசி சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல் மசாலா காரம் நிறைந்துள்ள உணவுகளை கொள்வதாலும் இவ்வகையான குடற் புண்கள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக காற்றுடன் புட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள குளிர் பானங்களை அருந்துவதாலும் குடல் புண்கள் ஏற்படுகின்றன.

அறிகுறிகள்:·

குறைந்த பசி இருக்கக்கூடும். குறைந்த அளவே சாப்பிட முடியும் அதாவது சாப்பிடுவதற்கு முன்போ அல்லது சாப்பிட்ட பிறகோ இரைப்பை புண் காரணமாக வலி ஏற்படும். அதனை சரியாக கண்டு கொள்ளாமல் போனால் ஆபத்தாக முடிய வாய்ப்புகள் உண்டு

இதன் ஆரம்ப நிலை புற்றுநோய் காரணமாக கூட வலி ஏற்படலாம் எனவே பரிசோதனை மூலமாக நீங்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.

எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் சிறுகுடலில் வரை எந்தெந்த இடத்தில் பொன் உள்ளது மற்றும் அதன் தீவிரத் தன்மை ஆகியவற்றை தெரிந்து கொள்வது அவசியமே ஆகும்.

எண்டோஸ்கோபி பரிசோதனை செய்யும்போதே பயாப்ஸி என்ற பரிசோதனையையும் செய்துவிட முடியும் வயிற்றுப்புண் பிரச்சனைக்கு எச் பைலோ பாக்டீரியா காரணமா இல்லை வேறு ஏதாவது காரணமா என்றும் கண்டுபிடித்து விட முடியும்

நம்மில் பணத்தை பணத்தை செலவு செய்யாமல் உடல் நலத்தை பாதுகாக்கவே விரும்புகின்றனர்

குடல் புண் பிரச்சனைக்கு நாட்டு மருத்துவம்

பூசணிக்காயில் இருந்து விதைகளை நீக்கி பின் தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். எடுத்துக்கொண்ட சீவல்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுக்க வேண்டும். இத்துடன் மிளகு சீரகத்தூள் அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிட வேண்டும் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் உடல் புண் குணமாவதை உணர முடியும்.

அகத்திக் கீரையை தினமும் உணவுடன் உட்கொண்டால் குடல் புண் குணமாகும்.

மாதுளம் பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூஸ் ஆக எடுத்துக் கொள்ளவும் எடுத்துக் கொண்ட ஜூஸ் உடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் மற்றும் வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும்.

அத்திக்காயை சிறு பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மன் பச்சரிசி கீரையுடன் மஞ்சள் ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்

நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது

ஏலக்காய் சுக்கு கிராம்பு சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும் இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வர குடல்புண் மற்றும் வயிற்று வலி குணமாகும்.

கசகசாவே தேங்காய் பாலில் ஊறவைத்து சாப்பிட்டாலும் வயிற்றுப்புண் குணமாகும்.

குறிப்பு 🙁 இது நமக்கு கிடைத்த தகவல் மட்டுமே இதனை சிறந்த நிபுணரிடம் ஆலோசித்து பின்பு பயன்படுத்த வேண்டும் )

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Latest Post

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram