Cricket: நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் கொல்கத்தா இடையிலான போட்டியில் K பாண்டியா வீசிய பந்தில் வெங்கடேஷ் ஐயர் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியானது கொல்கத்தா மற்றும் பெங்களூரு இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பெங்களூர் அணி டாஸ் வென்றது.
முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக ரகானே 56 ரன்களும், சுனில் நரைன் 44 ரன்கள், ரகுவன்சி 30 ரண்களும் எடுத்திருந்தனர். பெங்களூர் அணியில் க்ருனால் பாண்டியா மூன்று விக்கெட்டுகளும், ஹேசில் வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதில் வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டை க்ருனால் பாண்டியா வீழ்த்தினார். பன்னிரண்டாவது ஓவரை க்ருனால் பாண்டியா வீச வந்தார். அதுவரை வெங்கடேஷ் ஐயர் ஹெல்மெட் இல்லாமல் விளையாடிய நிலையில், அவர் வீசி முதல் பந்து வேகம் பந்துவீச்சாளர் போல பவுன்ஸ் ஆகி தலைக்கு மேல் சென்றது. இதற்கு பயந்து உடனே வெங்கடேஷ் ஐயர் ஹெல்மெட் கொண்டு வருமாறு கூறினார். அவர் வீசிய முதல் பந்து வைடு கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்த வீசிய பந்தில் விக்கெட் இழந்து வெளியேறினார் வெங்கடேஷ் ஐயர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இவர் ஸ்பின்னர் அ அல்லது வேத பந்துவீச்சாளரா என ட்ரோல் செய்து வருகின்றனர்.

