தமிழ் திரையுலகில் பிரபலமான கதாநாயகியாக வலம் வந்தவர் லட்சுமி. நடிகை லட்சுமி என்றாலே ரசிகர்கள் மத்தியில் குடும்ப பாங்கான கதைகளில் உணர்ச்சி ததும்பி நடிக்கும் நடிப்பு தான் நினைவிற்கு வரும். அழகிலும் சரி அறிவிலும் சரி டாப் ஒன் லட்சுமி தான் என்னும் சொல்லும் அளவிற்கு இருந்தது அவருடைய இளமை கால சினிமா கரீயர். இந்த காலத்து சாய் பல்லவி, கயது, ரஷ்மிகா போன்றவர்கள் நடிகை லட்சுமி அப்போது. அன்று மட்டும் இல்லாமல் இன்றளவும் அழகும் அறிவும் திறைமையும் சிறிதும் மாறாமல் தனது நடிப்பு துறையில் கலக்கி வருகிறார்.
முதன் முதலில் கன்னடம் மொழியில் 1961-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான ஸ்ரீ வள்ளி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய லட்சுமி தன்னுடைய காலத்தில் அற்புதமாக கதாபாத்திரங்களில் நடித்து பற்பல பாராட்டுகளை அள்ளியவர். தமிழ் மற்றும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது தமிழ் வெப்சீரிஸ் ஆன ஸ்வீட் காரம் காஃபி தொடரில் வெற்றிகரமாக நடித்துவருகிறார்.
இன்று அதிகாலையில் இருந்து நடிகை லட்சுமிக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு மிகவும் கவலை கிடமாக இருக்கிறார் என்று வதந்திகள் சமூக வலை தளத்தில் பறவியதை அடுத்து, தனக்கு எந்த உடல் நல பாதிப்பும் இல்லை எனவும் நான் நன்றாக ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

