IPL: டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லியின் வெற்றி குறித்து பேசிய அஷுதோஷ் சர்மா.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி மற்றும் டெல்லி அணி இரு அணிகளும் மோதின. முதலில் டெல்லி அணி டாசை வென்று பவுலிங் தேர்வு செய்தது. லக்னோ அணி முதலில் பேட்டிங் களம் இறங்கி 209 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என டெல்லி அணி களம் இறங்கியது.
டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். டூப்ளிசஸ் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் குறைவான ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், பரிதாப நிலையில் இருந்த டெல்லியை விப்ராஜ் மற்றும் அஷுதோஷ் சர்மா நிலைநாட்டினர். விப்ராஜ் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார்.
தொடர்ந்து ஆட்டமிழக்காமல் அஷுதோஷ் சர்மா கடைசி வரை போராடி 66 ரன்கள் எடுத்து திரில்லான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்த வெற்றிக்குப் பின் பேசிய அவர் கடைசி ஓவரில் நான் எந்த பதற்றமும் இல்லாமல் இருந்தேன் அது மட்டுமல்லாமல் மோகித் சர்மா ஒரு ரன் எடுத்து ஸ்டிரைக் கொடுத்தால் 6 அடித்து முடிக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன். நான் விளையாடியதை மிகவும் ரசித்தேன் என்னுடைய கடுமையான உழைப்புக்கு எனக்கு பலன் கிடைத்து விட்டது என வெற்றிக்கு பின் பேசியுள்ளார் டெல்லி வீரர் அஷுதோஷ் ஷர்மா.