ஒரே நாளில் உயிரிழந்த இரண்டு திரை பிரபலங்கள்!! அடுத்தடுத்து வெளிவரும் சோகச் செய்திகள்!!

Two screen celebrities died on the same day

சினிமா: தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுத்தடுத்து ஒரே நாளில் இரண்டு திரை பிரபலங்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு மற்றும் கடந்த ஊர் இரு ஆண்டுகளாகவே நாம் எதிர்பாராத நடிகர்கள் உயிரிழந்து வருவது தொடர்ச்சியாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சில முக்கிய நடிகர்கள் உயிரிழந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் தற்போது நேற்று ஒரே நாளில் இரண்டு தமிழ் சினிமாவின் பிரபலங்கள் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் கராத்தே மாஸ்டர் மற்றும் நடிகருமான ஷிகன் ஹுசைனி உயிரிழந்து பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அனைத்து ரசிகர்கள் மற்றும் திரைப்படங்கள் இரங்கல் தெரிவித்து அந்த சோகத்தை விட்டு மீளாமல் இருக்கும் நிலையிலே மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாரதிராஜா. இவரின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று இரவு உயிரிழந்ததாக வெளியாகி செய்தியால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நாளில் இரண்டு திரை பிரபலங்கள் உயிரிழந்த சோகம், சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நிலையில் மனோஜ் பாரதிராஜாவுக்கு அனைத்து நடிகர்கள் மற்றும் பொதுமக்களும் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram