கிரிக்கெட்: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் ஒருவரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா உயிரிழந்த நிலையில் அவருடைய நிறைவேறாத கனவு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இந்த ஆண்டு நேற்று சிஹான் உசைனி உயிரிழந்த நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். அந்த அதிர்ச்சியை விட்டு வெளியே வருவதற்குள் பேரதிர்ச்சி ஒன்று வெளியானது நேற்று இரவு.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக உயிர் இருந்ததாக சோகச் செய்து வெளியானது. இது அறிந்து மற்ற சினிமா பிரபலங்கள் நடிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேரில் வந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
48 வயதான இவர் தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வெளியான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன்பின் அவருக்கு சரியான திரைப்படங்கள் அமையாத காரணத்தால் அவர் ஒரு தோல்வி அடைந்த ஹீரோவாகவே பார்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த பின் வீட்டில் இருந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் மிகப்பெரிய கனவாக இருந்தது பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை ஒரு இயக்குனராக இயக்குவது தான். 13 ஆண்டுகளுக்கு முன்பே அந்த படத்தின் கதையை தயார் செய்து வைத்து விட்டதாகவும் அதை இயக்குவதற்கு தடங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் பேட்டிகளில் கூறியுள்ளார். தற்போது வரை அந்த ஆசை நிறைவேறாமலேயே காலமான செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

