மனோஜ்பாரதிராஜாவின் சினிமா பயணம் இதுதான்!! எப்படி இறந்தார் நடந்தது என்ன??

This is Manoj Bharathiraja's cinematic journey.

Cinema : தமிழில் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகன் இறந்த செய்தி தற்போது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் பாடகரும்கூட சிறிய வயதில் அவர் இறந்ததற்கு என்ன காரணம் அவரது உடல்நிலைக்கு என்ன ஆனது என்பது பற்றி பார்க்கலாம் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இவர் நேற்று மாலை 6 மணி அளவில் மாரடைப்பால் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 48 இவர் இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் கம்பத்தை சேர்ந்தவர் இவர் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்னர் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் ப்ளோரிடா மாகாணத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்னும் படிப்பை படித்திருக்கிறார்.

1999 ஆம் ஆண்டு தாஜ்மஹால் எனும் படத்தை பாரதிராஜா இயக்கினார். அந்த படத்தில் ரியாஸ்ஹனுக்கு ஜோடியாக மனோஜ் நடித்தார். அந்த படத்தில் பின்னணி இசை ஏ ஆர் ரகுமானால் உருவாக்கப்பட்டது. பாடல்களும் அவ்வளவு அருமையாக இருக்கும். இதனை தொடர்ந்து அவர் சமுத்திரம், கடல் பூக்கள் எனும் படங்களிலும் நடித்திருக்கிறார் இந்த இரண்டு படங்களையும் பாரதிராஜா தான் இயக்கினார். வீரநிலா சாதுரியன், மகா நடிகன் , அல்லி அர்ஜுனா வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். சிம்பு நடித்த மாநாடு படத்திலும் ஜான் மேத்யூ என்ற போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அதேபோல விருமன் என்ற ஒரு படத்திலும் முத்துக்குட்டி என்ற ஒரு ரோலில் நடித்திருக்கிறார். கடந்து 2023 ஆம் ஆண்டு மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கு இருந்தார். இது இவர் இயக்கிய முதல் படம் இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார் அதுமட்டுமில்லாமல் மனோஜ் பாடகரும் கூட தாஜ்மஹால் படத்தில் ஈச்சி எலுமிச்சி அந்த பாடலை அவர் தான் பாடி  இருந்தார். மனோஜ் ஏபிசிடி பாடத்தில் நடித்த நந்தனா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார் இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து காதலித்து திருமணம் செய்தனர் என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.

இவர்களுக்கு நந்தனாவின் சொந்த ஊரான கோழிக்கோட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி திருமணம் நடந்தது இதனை தொடர்ந்து சென்னையில் ரிசப்ஷனும் நடந்தது மனோஜ் பாரதிக்கு ஆர்த்தி கா மதிவதனி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றன இந்த நிலையில் தான் ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜ் பாரதிக்கு சிம்ஸ் மருத்துவமனையில் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதனை அடுத்து அவர் தனது சேத்துப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த மூன்று நாட்களாகவே அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனாலும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram