CRICKET: ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியான லக்னோ மற்றும் டெல்லி இடையிலான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு லக்னோ அணி உரிமையாளர் கூறிய வார்த்தைகள்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து கிரிக்கெட் ரசிக்கும் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த போட்டிகள் சுவாரசியமாக நடைபெற்று வருகின்றன. நிலையில் டெல்லி மற்றும் லக்னோ இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவியது இது குறித்து உரிமையாளர் கொயங்கா டிரஸ்ஸிங் ரூமில் என்ன கூறினார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி மற்றும் லக்னோ இடையிலான போட்டியில் முதலில் டெல்லி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கி லக்னோ அணி 209 ரன்கள் அடித்தது. தொடர்ந்து களமிறங்க டெல்லி அணி ஆரம்பத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 ரன்கள் என இருக்கும் நிலையில் 5 விக்கெட் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அனைவரும் டெல்லி அணி நிச்சயம் வெற்றி பெறாது என கூறிக் கொண்டிருந்த நிலையில் அசுத்தோஸ் சர்மா களம் இறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பின் கொயங்கா ரிசப் பண்ட் இடம் பேசியது இணையத்தில் வைரல் ஆனது மேலும் அவர் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று வீரர்களிடம் பேசியதாவது முதல் போட்டி எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. ஆனால் நாம் மேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டோம் இதில் நான் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன் அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக விளையாடி வெற்றி பெறுவோம் என நம்புகிறேன் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.