கிரிக்கெட்: நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த அணி 300+ ரன்கள் அடிக்கும் என தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆறாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் மோத உள்ளன. இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீண்டு வருவதால் எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த சீசனில் மட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு முறை 250 க்கும் மேற்பட்ட ரண்களை அடித்துள்ளது இது குறித்து அவர் கூறுகையில் தற்போது ஐ பி எல் போட்டி 200க்கும் மேற்பட்ட ரன்கள் அடிப்பது சாதாரணமாக மாறிவிட்டது. மைதானங்கள் பேட்டர்களுக்கு சாதகமாக மாறிவிட்டது. அதுவும் குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வலிமையான பேட்டிங் லைன் அப்பை கொண்டுள்ளது.
தொடக்கப் போட்டியிலேயே 250க்கும் மேல் ரன் சேர்த்து அதிகபட்ச பிரண்ட்ஸ் ஐ பி எல் அணியின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை ஆக்கிரமித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதனால் இந்த வருடம் நிச்சயம் ஹைதராபாத் அணி 300-க்கும் மேற்பட்ட ரண்களை அடிக்கும் என அவர் கூறியுள்ளார்.