கூட்டணி குறித்து தலைவர் மட்டும்தான் முடிவெடுப்பார்!! தமிழக வெற்றிக் கழகத்தின் 17 தீர்மானங்கள்!!

17 resolutions of the TVK

Tvk: விஜய் தலைமையில் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

  1. இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.
  2. மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்.
  3. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க கூடாது
  4. இருமொழிக் கொள்கையில் உறுதி.
  5. டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
  6. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு ஒரே தீர்வு.
  7. சமூக நீதியை நிலைநிறுத்த சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
  8. சென்னை இசிஆரின் கட்டப்படவுள்ள பன்னாட்டு அரங்குக்கு தந்தை பெரியார் பெயரை சூட்டுக.
  9. கூட்டணி பற்றி முடிவு எடுத்த கட்சி தலைவருக்கே முழு அதிகாரம்.
  10. கொள்கை தலைவர்களின் வழியில் தவெக பயணிக்கும்.
  11. தமிழக வெற்றி கழகத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
  12. தவெக விற்கு அயராது பாடுபட்டு மறைந்த கழக செயல் வீரர்களுக்கு இரங்கல்.
  13. நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.
  14. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
  15. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
  16. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.
  17. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான கையாலாகாத திமுக அரசுக்கு கண்டனம்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram