Chennai : தமிழக அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷாவை சந்திக்க டில்லி சென்று இருந்தார். இதனிடையில் 2026 காண தேர்தல் கூட்டணி பாஜக அதிமுக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 2023 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த கூட்டணி உடைய முக்கிய காரணமாக இருந்தவர் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக பயணிக்க அண்ணாமலைக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அண்ணாமலை தலைவர் பதிவிலிருந்து விலகுவாரா என்ற கேள்விக்கு சரியான பதிலை செய்தியாளர்களுக்கு அளிக்கவில்லை. பின்பு கூட்டணி குறித்து பாஜகவின் தலைமை தான் முடிவு செய்யும் என்றால் அவர்கள் முடிவு எதுவாக இருந்தாலும் நான் அதை கேட்டுக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இந்த கூட்டணியை தொடர வேண்டும் என்றால் அண்ணாமலையை தலைவருப்பதியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வரும் 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் பாஜக அதிமுக கூட்டணியே பலமாய் இருப்பதாக கருதப்படுகிறது. பாஜகவுக்கு தமிழகத்தில் ஓட்டு வங்கி அதிகரித்ததற்கு காரணம் அண்ணாமலை மட்டுமே என்று அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும் அண்ணாமலை இல்லை என்றால் பாஜகவிற்கு யாரும் ஓட்டு செலுத்த மாட்டார்கள் என்றும் அமித்ஷாவிற்கு தமிழக பாஜக உறுப்பினர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையில் டெல்லி சென்று இரு நாட்களுக்கு முன்பு அமித்ஷாவை சந்தித்து பேசி வந்துள்ளார். பின்பு இன்றும் திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார் அமித்ஷாவை சந்திக்க. இந்நிலையில் அரசியல் வட்டாரங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீக்கிவிட்டு அதிமுகவிலிருந்து விலகி பாஜக தலைவராக செங்கோட்டையன் நிர்ணயிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகிறது.
- நிலையில் மூத்த பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டேவிடம் பாஜகவில் அண்ணாமலின் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பிய பொழுது அவர் பாஜகவில் இருந்து அண்ணாமலையை நீக்க போவதாக அமிக்ஷாவும் கூறவில்லை தானாக நீங்க போவதாக அண்ணாமலையும் கூறவில்லை. மேலும் பாஜகவின் தலைவரை மாற்றுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறவில்லை என்றும் கூறியுள்ளனர். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை இரண்டு பேரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதினால் ஓட்டு வங்கி குறையும் காரணத்தினால் பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கிவிட்டு வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமிக்க போவதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும்அண்ணாமலை பாஜகவின் நீடிப்பாரா இல்லையா என்று 4,5 நாட்களில் தெரியவரும் என்று கூறியுள்ளனர். இதனடையில் ஆறாம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகை ஒட்டி கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..