cricket: நேற்று மும்பை மற்றும் கொல்கத்தா இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
நேற்று நடைபெற்று வரும் ipl தொடரின் 12 வது போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை இரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் மும்பை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து களமிறங்கியது. கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய தொடக்க வீரர்களான சுனில் நரைன் மற்றும் டிகாக் இருவரும் தொடக்கத்திலே ஆட்டமிழந்தனர். டிகாக் 1 ரன்னிலும் நரைன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி புதிய இடது கை வேகப்பந்து வீச்சாளராக அஸ்வனி குமாரை களமிறக்கியது. அவர் முதல் போட்டியில் களமிறங்கி அபாரமாக பந்து வீசி முக்கிய அதிரடி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அவர் மொத்தம் 3 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுகுறித்து போட்டிக்கு பின் பேசிய அவர் இந்த அணியில் இன்று நான் இடம்பெற போகிறேன் என்று தெரிந்ததில் இருந்து எனக்கு பசியே எடுக்க வில்லை. மதியம் கூட நான் உணவு சாப்பிடவில்லை வாழைப்பழம் மட்டும் உட்கொண்டேன். அணி நிர்வாகம் என்னை ஊக்கப் படுத்தியது இது தான் உன் முதல் போட்டி என. என்று அவர் போட்டி முடிந்த பின் மனம் திறந்து பேசியுள்ளார்.