இயக்குனர்கள் என்றாலே அவர்களுடைய படங்களை வைத்து தான் ரசிகர்கள் அவர்களை கொண்டாடுவார்கள். இந்த வகையில் பார்க்கும்பொழுது மணிரத்தினம் என்றுமே ரசிகர்களின் மனதில் தனக்கென தனி ராஜாங்கத்தை நடத்துகிறார் என்று சொன்னால் மிகை ஆகாது. இப்படிப்பட்ட மணிரத்னம் அவர்களின் படத்தில் அமிதாபச்சன் அவர்கள் குறை கூறிய சம்பவமானது நிகழ்ந்திருக்கிறது. இதற்கு மணிரத்னம் அவர்கள் என்ன பதில் அளித்தார் என்பதை இந்த பதிவில் காணலாம்.
இயக்குனர் என்பதை தாண்டி சிறந்த ஒளிப்பதிவாளராகவும் மணிரத்தினம் அவர்கள் விளங்குகிறார். இவரை பார்த்து சினிமாவிற்கு வந்த இயக்குனர்கள் பலர். இவருடைய அலைபாயுதே திரைப்படத்தை பார்த்த பின்பு தான் தானும் திரைக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இயக்குனர் கௌதம் மேனன் அவர்களுக்கு தோன்றியதாக அவரே தெரிவித்திருப்பது இதற்கு சான்றாக அமைந்திருக்கிறது. எப்பொழுதுமே காதல், தீவிரவாதம், மதவாதம் போன்ற கருத்துக்களை கொண்டு மக்களின் மனதில் பதிய வைக்கும் அளவு படம் எடுக்கக் கூடியவர் இவர் பதிய வைக்கும் அளவு படம் எடுக்கக் கூடியவர் இயக்குனர் மணிரத்னம்.
ராமாயணத்தை மையமாகக் கொண்டு அதனுடைய கருவை வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் ராவணன். ராவணன் சீதையை தூக்கிச் சென்று சிறை பிடித்து இருப்பதை வைத்து மணிரத்தினம் இயக்கிய ராவணன் திரைப்படம் ஆனது தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படமானது ஹிந்தியில் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஹிந்தியில் இந்த படம் நினைத்த அளவு வெற்றி பெறவில்லை. இதற்கு அமிதாப்பச்சன் அவர்கள் இந்த திரைப்படத்தில் எடிட்டிங் சரியில்லை என தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் மணிரத்தினத்திடம் செய்தியாளர் கேட்ட பொழுது, மணிரத்தினம் அவர்கள் ” அமிதாப்பச்சன் கிட்ட தான் நல்ல பெயர் எடுக்க வரவில்லை என்றும் தனக்குத் தெரிந்த சினிமாவை மட்டுமே எடுக்க தான் இங்கு வந்திருப்பதாகவும் ” தெரிவித்திருக்கிறார்.





