NEET UG 2025: MBBS சீட் பெற எவ்வளவு மதிப்பெண் தெரியுமா!!

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் தனியார் மற்றும் அரசு மருத்துவர் கல்லூரிகளில் இணைவதற்கான கட் ஆப் குறித்தும் இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

 

2025 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு இன்னும் ஒரு மாத காலத்தில் அதாவது சரியாக மே 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த தருணத்தில் எவ்வளவு மதிப்பெண் பெற்றால் மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்கும் என்பது குறித்த பல கேள்விகள் மாணவரிடையே இருக்கிறது.

 

தமிழகத்தில் 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்விற்காக விண்ணப்பங்களை பதிவிட்டு இருக்கின்றனர். மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு தமிழகத்தை பொறுத்த வரை அதிக அளவு போட்டி நிகழ்வதால் தமிழகத்தில் எந்த கட் ஆப் வரை எடுத்தால் மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்கும் என்பது குறித்த முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இவை அனைத்தும் ஆர்.ஜி.ஆர் அகாடமி என்ற youtube சேனலில் பகிரப்பட்ட வீடியோவில் இருந்து பெறப்பட்டிருக்கிறது.

 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்த இடங்களுக்கான கட் ஆப் :-

 

✓ பொதுப் பிரிவு – 650 – 600

 

✓ பி.சி – 620 – 590

 

✓ பி.சி.எம் – 615 – 585

 

✓ எம்.பி.சி – 610 – 580

 

✓ எஸ்.சி – 535 – 500

 

✓ எஸ்.சி.ஏ – 495 – 470

 

✓ எஸ்.டி – 500 – 480

 

அரசு கல்லூரிகளில் எதிர்பார்க்கப்படும் கட் ஆப் :-

 

✓ பொதுப் பிரிவு – 650

 

✓ பி.சி – 620

 

✓ பி.சி.எம் – 615

 

✓ எம்.பி.சி – 610

 

✓ எஸ்.சி – 535

 

✓ எஸ்.சி.ஏ – 495

 

✓ எஸ்.டி – 500

 

இவை அனைத்தும் மிக துல்லியமான கட் ஆப் விவரங்கள் கிடையாது. இவற்றின் மதிப்புகளில் கூடவோ குறையவோ செய்யலாம் என்பதை குறிப்பிடத்தக்கது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram