அடகு நகைகளின் புதிய விதி!!RBI பதிலளிக்க உத்தரவு!!

நடுத்தர வர்க்கத்தை பாதிக்கக்கூடிய வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீண்டும் அடகு வைக்க புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய விதிகள் மக்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்த நிலையில் இது குறித்த வழக்கு மதுரை ஹைகோர்ட் கிளையில் போடப்பட்டுள்ளது.

 

அதாவது, நகை அடகு வைத்தவர்கள் மீண்டும் அந்த நகையினை மறு அடக்கு வைக்க வேண்டும் என்றால் அடகு வைத்த நகையின் உடைய மொத்த தொகை மற்றும் அதற்குரிய வட்டி என அனைத்தையும் செலுத்திய பின்பு தான் நகையை மீட்டு மறு அடகு வைக்க முடியும் என இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

 

பலரும் தங்களுடைய நகைகளை மறு அடக்க வைப்பதற்கு அந்த ஆண்டிற்கான வட்டியை மட்டும் செலுத்தி மீண்டும் அடகு வைத்து வந்த நிலையில் ஆர்பியை கொண்டு வந்த இந்த புதிய திட்டமானது நகையை மீட்டெடுக்க முடியாத சூழலில் கொண்டு விடுவதாக பலரும் குற்றம் சாட்டினர். இது குறித்த விளக்கினை மதுரை ஹை கோர்ட் நீதிபதி விசாரித்து, இந்தியன் ரிசர்வ் வங்கியானது உடனடியாக இந்த புதிய விதி குறித்த பதிலை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

 

இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அதற்கான முறையான பதிலை இந்தியன் ரிசர்வ் வங்கி அளிக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே வயிறு குறித்து பதிலளித்த இந்தியன் ரிசர்வ் வங்கியானது இந்த புதிய விதியின் மூலம் பொதுமக்கள் தங்களுடைய நகைகளை அடகு வைப்பதிலிருந்து மீட்டு தங்களிடமே வைத்துக் கொள்ள இந்த திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்களோ இத்திட்டம் நகைகளை முழுவதுமாக அடமானத்திலேயே விட்டு விடும் படியாக இந்த திட்டம் அமைந்திருக்கிறது என குற்றம் சாட்டி வருகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram