உடலுக்கு அதிக புரதச்சத்துக்களை கொடுக்கக்கூடிய உணவாக சிக்கன் பார்க்கப்படுகிறது. பொதுவாகவே வாரத்தில் ஒரு முறையாவது சிக்கன் சாப்பிடுவது என்பது சராசரி பழக்கமாகவே வாழ்வியல் சூழலில் மாறி இருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய தருணத்தில் ஆந்திராவில் சிக்கன் சாப்பிட்டதால் பறவை காய்ச்சலுக்கு உள்ளாகி 2 வயது சிறுமி இறந்திருப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அந்த சிறுமிக்கு பறவை காய்ச்சல் தோன்றியது. பொதுவாக பறவை காய்ச்சலானது மனிதர்களுக்கு எளிதில் பரவாது என ஆராய்ச்சிகள் கூறும் நிலையில் இது போன்ற ஒரு மரணம் நிகழ்ந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சமீப காலமாகவே ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாகவும், இது போன்ற காரணத்தால் பலரும் தங்களுடைய கோழிகளை மொத்தமாக கொள்ளக்கூடிய சூழலும் உருவாகி வருகிறது.
இதுகுறித்து முழுவதுமாக விசாரித்த பொழுது, ஆந்திராவில் உள்ள ஒரு குடும்பத்தில் சிக்கனை சமைப்பதற்காக வாங்கி சென்றதாகவும் சமைக்காமல் பச்சையாக அந்த கறியை 2 வயது சிறுமிக்கு கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. பச்சையாக அந்த கறியை உண்டதால் குழந்தைக்கு பறவை காய்ச்சல் உண்டானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.திடீரென பிப்ரவரி 26 ஆம் தேதி உடல் நல பாதிப்பால் அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த பொழுது என்ன நோய் என்று கண்டறிய முடியவில்லை என்பது போல தொடர்ந்து மருத்துவம் நடைபெற்று வந்துள்ளது.
அதனை தொடர்ந்து பிப்ரவரி 28ஆம் தேதி குழந்தைக்கு தொடர் வாந்தி பேதி மற்றும் அதிக காய்ச்சல் போன்றவை கண்டறியப்பட்டதால் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு காய்ச்சலுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்ட பொழுது H5N1 என்ற பறவை காய்ச்சல் அந்த குழந்தைக்கு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவம் செய்யப்பட்ட வந்த பொழுதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. அதனை தொடர்ந்து அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் சோதனை செய்து பார்த்ததில் நல்ல வேலையாக வேறு யாருக்கும் பறவை காய்ச்சல் பரவவில்லை.
கோழிக்கறியோ அல்லது முட்டையையோ சாப்பிட வேண்டும் என்றால் அதற்கான முறையான கொதிநிலை வைத்து சமைத்த பின்பு தான் சாப்பிட வேண்டும் என சுகாதாரத்துறை தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.