2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 16 வது லீக் போட்டி நேற்று லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2 வெற்றி 2 தோல்வி என்ற விகிதத்தை அடைந்தன. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி 1 வெற்றி 3 தோல்வி என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்திருக்கிறது.
போட்டி இவ்வாறு செல்ல லக்னோ அணியின் பந்துவீச்சாளரான திக்வேஷ் சிங் ரதி சிறந்த ஆட்டநாயகன் விருதை பெற்றார். 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் எடுத்த விக்கெட் வீரர் நமன் திர் உடையது.
டிக்கெட்டை எடுத்த இவர் அமைதியாக இருக்காமல் கையில் எதையோ எழுதி வெளியே போ என்பது போல சைகை செய்ய இவருக்கு பிசிசிஐ 2.5 ஐபிஎல் விதிமுறைகளின் படி சம்பளத்திலிருந்து 50% அபராதம் போடப்பட்டிருக்கிறது. இதனோடு ஒரு கருப்பு புள்ளி வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஐபிஎல் போட்டிகள் துவங்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட் இதுவரையில் 4 போட்டிகள் விளையாடிய நிலையில் இது இவருக்கு 2 வது முறை விதிக்கப்படும் அபராதமாகும். முதல் முறை பஞ்சாப் பணியுடன் இதே போன்று லக்னோவின் பந்துவீச்சாளரான திக்வேஷ் சிங் ரதி விதிமுறைகளில் ஈடுபட்டதால் அப்பொழுது அவருக்கு சம்பளத்திலிருந்து 25% அபராததோடு ஒரு கருப்பு புள்ளி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 4 போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்ட நிலையில் 2 போட்டிகளில் அபராதங்களை பெற்று சம்பளத்திலிருந்து 75% வரை அபராதமாக செலுத்தி இருக்கக்கூடிய இவர் நிதானமாகவும் அமைதியாகவும் விளையாட வேண்டும் என ஐபிஎல் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.