இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பிப்ரவரி மாதம் ரெப்கோ வட்டி விகிதத்தை குறைத்ததை போல மீண்டும் ரெப்கோ வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே 6.50% மாக இருந்த ரெப்கோ வட்டி விகிதத்தை இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது 0.25 சதவிகிதம் குறைத்து 6.25 சதவீதமாக அறிவித்திருந்தது. பல வருடங்கள் கழித்து அறிவிக்கப்பட்ட இந்த ரெப்கோ வட்டி விகிதத்தின் குறைவு என்பது இ எம் ஐ கார் மற்றும் வீடு போன்றவற்றை வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. மீண்டும் ஒரு முறை ரெப்கோ வட்டி விகிதத்தை இந்தியன் ரிசர்வ் வங்கி குறைக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று மீண்டும் ரெப்கோவட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைந்து 6 சதவிகிதமாக மாறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் இ எம் ஐ செலுத்தக்கூடியவர்களுக்கு அதன் நன்மை பயக்கும் என்றும் இஎம்ஐ கட்டக் கூடியவர்கள் மிக விரைவாகவே தங்களுடைய கடன் தொகையை அடைத்து விட்டு மிகப்பெரிய லாபத்தையும் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மாதம் 30 ஆயிரம் ரூபாய் வீதம் 20 வருடங்களுக்கு வீட்டின் மீது லோன் போடப்பட்டுள்ளது என்றால் ரெப்கோ வட்டி விகிதத்தின் குறைவால் உங்களுடைய கடன் வருடம் குறையும். அதே முப்பதாயிரம் ரூபாயை செலுத்தும் பட்சத்தில் 20 வருடங்கள் என்பது 15 வருடங்களாக குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இந்த ரெப்போ வட்டி விகிதத்தால் இ எம் ஐ வீடு வாங்கி இருப்பவர்கள் அல்லது வீட்டு கடன் வைத்திருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய நற்செய்தியாக மாறியுள்ளது.