காரைக்கால் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு எந்தெந்த ராசிகள் செல்லக்கூடாது என்றும் எந்த ராசிகள் செல்லலாம் என்றும் பார்க்கலாம்.அப்படியே சென்றாலும் என்னென்ன துன்பங்கள் ஏற்படும் என்றும் பார்க்கலாம்.
காரைக்காலை அடுத்து திருநாளாறில் தர்பாரணயேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு சனீஸ்வர பகவான் வீற்றிருக்கிறார் இங்கு சனிப்பெயர்ச்சி தினங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. மேலும் ஜாதகத்தில் சனிதோஷம் உள்ளவர்களும் சுற்றுலா பயணிகளும் திருநாள்ளாறு கோவிலில் உள்ள நள குலத்தில் நீராடி சனி பகவானை வழிபாடு செய்தால் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகச்சனி ஆகியவை நீங்கும்.
திருநாள்ளாறு :
மேலும் இதனால்தான் திருநாளருக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்று வரும் வழக்கத்தை பலர் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இந்த கோவிலுக்கு சில ராசிக்காரர்கள் செல்லக்கூடாதாம்.
மகர ராசி – கும்ப ராசி :
மகர ராசி, கும்ப ராசிக்கும் அதிபதி சனி பகவான் ஆகும். எனவே இந்த ராசிக்காரர்களும் லக்கனக்காரர்களும் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று வந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றங்களும், கடன் பிரச்சனைகளும், திருமண தடைகளும் தீரும்.
ரிஷபம், துலாம் :
ரிஷிப ராசிக்காரர்களும், துலாம் ராசிக்காரர்களும் திருநாள்ளாறு கோவிலுக்கு செல்லலாம். இவர்களுக்கு ஆரோகியதை அள்ளி கொடுப்பார் சனீஸ்வரர். அதைவேளையில், திருநள்ளாறுக்கு செல்லகூடாத 4 ராசிகளை சொல்கிறார்களாம்.
மிதுன ராசி, கடக ராசி :
மிதுன ராசி, கடக ராசி, சிம்ம ராசி, கன்னி ராசி ஆகிய ராசிக்காரர்களும் லக்கினக்காரர்களும் திருநாள்ளாறு செல்லவே கூடாதாம். மேலும் அங்கு சென்றால் வாழ்க்கையில் துன்பங்கள் சந்திக்க வேண்டி வரும்.
சனி பகவான் :
சனிபகவானின் வீரியம் குறைய அங்குள்ள குளத்தில் குளிக்கலாம். அந்நீர் தீர்த்தம் என்று அழைக்கபடுகிறது. அதனால் அந்த அக்குளத்தில் குளித்துவிட்டு துணிகளை அங்கு போட கூடாது. அது பாவம் செய்தது போன்றதாகும்.
நவகிரகங்கள் :
நவகிரகங்களில் உள்ள சனீஸ்வரருக்கு கருப்பு உளுந்து, கருப்பு எள்ளு உள்ளிட்ட பொருட்களை தானம் செய்யலாம். திருநள்ளாறு என்றில்லை பொதுவாக நவகிரகங்கள் கொண்ட கோவிலில் சனீஸ்வரை நேராக நின்று வணங்க கூடாது ஒரு பக்கமாக நின்றுதான் வழிபட வேண்டும்.
காக்கைக்கு உணவு :
காக்கைக்கு உணவு அளிக்கும் போதும் எச்சில்படாத உணவை அளிக்கவேண்டும் நாம் சாப்பிடுவதற்கு முன்பு உணவு வைக்க வேண்டும். அசைவ உணவு வைக்க கூடாது. அதைபோல் கால்களை முழுவதுமாக நனையும் படி கழுவுதல் வேண்டும். இல்லையெனில் சனிபகவான் முதலில் காலை பிடிப்பர் என்பதால் கழுவாத பாகம் அவருக்கு எளிதில் பிடித்துக் கொள்ள வாய்ப்பாகிவிடும்.
பெருமாள் பக்தர்கள் :
பெருமாளின் தீவிர பக்தர்களை சனிபகவான் சோதிக்க மாட்டார். இவை சனீஸ்வரர் பெருமாளுக்கு ஒரு உறுதியாகவே தெரிவித்துள்ளார். வீட்டிலோ அல்லது வெளியிலோ யாரையும் “சனியனே “, “சனியன் பிடிச்சவனே “, “சனியன் பிடித்தவளே ” என்று திட்ட கூடாது.
சனீஸ்வரக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்லலாம் :
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத் !
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத் !
ஓம் காகத்வஜாய வித்மஹே
காக்கஸ்த்தாய தீமஹி தந்நோ சனைச்சர ப்ரசோதயாத் !
ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயபுத்ராய
தீமஹி தாந்நோ மந்தஹ் ப்ரசோதயாத் !
ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத் !
என்ற மந்திரத்தை சொல்லலாம். இந்த 5 வரிகள் இல்லாவிட்டாலும் முதல் இரு வரிகளை சொல்லலாம்.