பலருடைய வாழ்க்கையில் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்திருக்க நேரிடும். சாலையில் நடந்து செல்லும் பொழுது பணமாகவோ சிலரை காசுகளாகவோ கீழிருந்து கிடைப்பது என்ன அர்த்தம் என பலருக்கும் பல கேள்விகள் உள்ளன.
ஒரு சிலர் இவ்வாறு கீழே இருந்து கிடைக்கக்கூடிய பணம் எடுக்கலாமா வேண்டாமா என யோசிப்பார். ஒரு சிலரோ அதை எடுத்து அருகில் இருக்கக்கூடிய இல்லாதவர்களுக்கு வழங்கிவிட்டு செல்வர். மேலும் சிலர் கீழே கிடைக்கக்கூடிய பணத்தை எடுத்து போற வழியில் உள்ள கோவில்களில் போட்டுவிட்டு செல்வார்கள். உண்மையில் கீழிருந்து பணம் கிடைத்தால் அதற்கான அர்த்தம் என்ன ? சாஸ்திரங்கள் இது குறித்து என்ன சொல்கின்றன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
கீழிருந்த பணம் கிடைத்தால் என்ன அர்த்தம் :-
✓ கீழே இருந்து பணம் கிடைப்பது மங்களகரமான விஷயமாக சாஸ்திரம் கூறுகிறது. அதிலும் இது நம் முன்னோர்களின் உடைய ஆசீர்வாதம் ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ கீழே கிடந்த பணமாகவோ அல்லது சிலரையாகவோ காசு கிடைக்கும் பட்சத்தில் அவை வெற்றிக்கான அறிகுறி என்று சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
✓ சாலையிலிருந்து சில்லரை காசுகளை கண்டெடுக்கும் பொழுது நல்ல வேலை கிடைப்பதற்கான அறிகுறி என குறிப்பிடப்பட்டுள்ளது.
✓ கத்தையாகவோ அல்லது அதிக பணத்துடன் மணி பர்ஸ் உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் பூர்வீக சொத்தானது உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைத்த பணம் உங்களுடையது இல்லை என்ற உடன் அதனை உரியவரிடம் சேர்ப்பது அவசியம். இப்படி செய்தால் பல நன்மைகள் வந்து சேரும்.
✓ வழியில் செல்லும் பொழுது பணம் கிடைப்பது நல்ல சகுனமாக பார்க்கப்பட்டாலும் அந்த பணத்தை உரியவரிடம் கொண்டு சேர்ப்பது அதைவிட நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.