கோவை மாவட்டத்தில் உள்ள சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி பூப்பெய்த காரணத்தால் அவரை வகுப்பறைக்குள் நுழைய விடாமல் வகுப்பறையின் வாசலில் அமர வைத்து முழு ஆண்டு தேர்வு எழுத வைத்த சோகம் கோவையை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைவரையும் கோபம் அடைய செய்திருக்கிறது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது :-
தனியார் பள்ளி மீது அரசு ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த தனியார் பள்ளியின் உடைய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
பள்ளி மாணவியின் மீது இது போன்ற ஒடுக்குமுறை நடத்தப்பட்டு இருப்பது பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் மாணவி தனியாக வெளியில் இல்லை அவரோடு நாங்களும் இருக்கிறோம் என பதிவிட்டு இருக்கிறார்.
8 எட்டாம் வகுப்பு முழு ஆண்டு தேர்விற்காக பள்ளிக்கு சென்ற மாணவி வயதிற்கு வந்த காரணத்தால் பள்ளியின் வகுப்பறைக்குள் நுழைய விடாமல் அவரை இரண்டு தேர்வுகளுக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். அவரை அழைத்து வருவதற்காக சென்ற பெற்றோர்கள் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து பள்ளி மீது விசாரணை நடைபெற்ற பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.