ஆண்களின் உடலை குளிர்ச்சியாக வைக்கும் பழைய சோறா!! பழையசோறில் இவ்வளவு நன்மையா!!


* ஆண்களுக்கு உடல் சூடு அதிகமாக ஏற்படுவதால் விந்து நீர்த்துப்போதல் மற்றும் விந்து முந்துதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது *வெயில் காலங்களில் தயிர் மற்றும் மோர் சேர்த்த பழைய சாதம் சாப்பிட்டால் இந்த பிரச்சனை பழைய சோறு தீர்க்கும்.

*சோறு நொதித்த பின்பு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது பல நன்மைகளை தருகிறது.

* நமக்கு உடல் உஷ்ணத்தை குறைத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கிறது.

* பழைய சோறு குடலை சுத்தப்படுத்துகிறது. அதே சமயம் மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றை உடனடியாக சரி செய்கிறது.

* பழைய சோறு சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது.

* பழைய சோறு உடலின் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்து பாதுகாக்கிறது.

* பழைய சோறு நொதிக்கும் பொழுது பல்வேறு சத்துக்கள் உண்டாகிறது இதில் முக்கியமாக இரும்பு சத்து கால்சியம் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் பழைய சோறில் கிடைக்கிறது.

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் புரத சத்து இரும்பு சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

* சர்க்கரை நோயாளிகள் பாலிஷ் செய்யப்படாத அரசியல் செய்யப்பட்ட பழைய சோறை சாப்பிடலாம் இதனால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

* காலையில் பழைய சோறை தேவைக்கேற்றார் போல் உப்பு சேர்த்து நன்றாக கைகளால் பிசைந்து குடிக்கலாம் பழைய சோறுடன் பச்சை மிளகாய் அல்லது சின்ன வெங்காயம் அல்லது மாங்காய் அல்லது கருவாடு போன்ற சைடு டிஷ் உணவுகளை சேர்த்து பழைய சோறை சாப்பிடலாம் பழைய சோறில் பல்வேறு பயன்கள் காணப்படுகிறது இது முக்கியமாக ஆண்களுக்கு மிகவும் நல்லது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram