கோடை காலம் என்றாலே தர்பூசணி பழங்கள், முலாம்பழங்கள், வெள்ளரி பழங்கள் மற்றும் இளநீர், பலாப்பழம் போன்றவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதேபோன்றுதான் பலா பிஞ்சு இந்த கோடை காலத்தில் அதிக அளவு கிடைக்கக்கூடிய பழமாக இருக்கிறது. இதனை சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு எத்தனை எத்தனை நன்மைகள் தெரியுமா ??
✓ ஊட்டச்சத்துக்கள் :-
பலா பிஞ்சில் கார்போஹைட்ரேட், பைபர், வைட்டமின்களான சி மற்றும் பி6 அதனோடு கூடவே அதிக அளவு மினரல்கள் நிரம்பி இருக்கின்றன.
✓ நார்ச்சத்து :-
நம் வயிற்றில் ஜீரணத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலை தடுக்கவும் இந்த பலா பிஞ்சு மிகப்பெரிய அளவில் உதவி புரிகிறது.
✓ நீரிழிவு நோயாளிகள் :-
இந்த பழத்தை சாப்பிடுவதால் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் ரத்த சர்க்கரையை மெதுவாக உயர்த்துகிறது. இதன் மூலம் டயாபட்டிக் நோயாளிகள் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
✓ எடையை குறைக்க :-
குறைந்த காறோரி கொண்டதால் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஆகச்சிறந்த பழமாக இருக்கிறது.
✓ இளமையோடு வாழ :-
இந்த பலா பென்சில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளதால் அவை சருமத்தில் இருக்கக்கூடிய செல்கள் பழுதடையாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் இளமையானது நீண்ட காலம் வருவதற்கும் இந்த பழம் துணை நிற்கிறது.
பொதுவாக பலா பிஞ்சில் குழம்பு கிரேவி பொரியல் சிக்கன் ஸ்டைல் பலா பிஞ்சு ஃப்ரை போன்ற பலவற்றை சமைத்து சுவையாக சாப்பிடலாம்.