அமெரக்கா; அமெரிக்காவில் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக குடியேறிய மக்களை அந்நாட்டு புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் அனைவரையும் வெளியேற்றி வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வந்தவர்களை முதற்கட்டமாக 103 வலுக்கட்டாயமாக இந்தியாவில் கொண்டு வந்து இறக்கிவிட்டு சென்றனர்.
இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 15ஆம் தேதி மீதம் இருக்கும் இந்தியர்களை பஞ்சாபில் உள்ள விமான நிலையத்தில் தரை இறங்குவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதில் சட்ட விரோதமாக குடியேறியவர்களில் பஞ்சாப் அரியானா மற்றும் உத்திரபிரதேசம் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் அனைவருமே வெளிநாட்டு வேலை வாய்ப்பு தரும் ஏஜெண்டுகளை நம்பி பல்வேறு நாடுகள் வழியாக அமெரிக்க சென்றுள்ளனர்.
இதில் இதில் ஒவ்வொருவரும் தலை 50 லட்சம் ஏஜெண்டுகளுக்கு கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளனர். மேலும் 487 இந்தியர்களை அமெரிக்காவிற்கு வெளியேற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியால் பல்வேறு நாட்டில் உள்ள மக்கள் அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர். சட்ட விரோதமாக குடியேறிய அனைத்து மக்களையும் வலுக்கட்டாயமாக அவரவர் நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்..
வலுக்கட்டாயமாக வெளியேற்றி அனைத்து மக்களும் கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளனர். சட்ட விரோதமாக இந்தியாவிற்கு வரும் அமெரிக்கா விமானம் பஞ்சாபில் ஏன் கரை இறங்குகிறது என்று எதிர்க்கட்சியனர் குற்றம் சாட்டுகின்றனர். குஜராத்தில் ஏன் தரையிறக்கவில்லை பஞ்சாப் மாநிலத்திற்கு அவதூறு பரப்பு நோக்கத்தில் பாஜக அரசு முயற்சிக்கிறது என்று கட்சியினர் கூறுகின்றனர்…





