நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பென்சிலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தின் காரணமாக வகுப்பறையிலேயே தன் நண்பரை அறிவாளால் வெட்டியதுடன் அதனை தடுக்க வந்த ஆசிரியரையும் எட்டாம் வகுப்பு மாணவன் அறிவாளால் வெட்டிய சம்பவம் அவ்விடத்தினை பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவத்தினை குறித்து கைது செய்யப்பட்ட மாணவன் தாமாகவே முன்வந்து வாக்குமூலம் கொடுத்ததாகவும் மேலும் தன்னை என்றும் சீர்திருத்த பள்ளியில் சேருங்கள் என்றும் கூறியுள்ளார்.
பென்சில் ஒன்றை பகிர்ந்து கொள்வதின் காரணமாக இரு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மாணவன் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளார். காலாண்டு தேர்வு வரை மற்றொரு பள்ளியில் படித்த அவர் அங்கிருந்து டி.சி வாங்கி விட்டு இவர் விளையாட்டு வீரர் என்பதால் இப்பள்ளியில் புதிதாக வந்து சேர்ந்துள்ளார்.
மேலும் சமீப காலங்களாகவே தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் அதிகரித்து வருகிறது என்று தகவல் தெரிய வந்துள்ளது.
இதே போல் ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அரசு தேர்வு எழுதிவிட்டு ஒருவரை ஒருவர் தாக்கியதோடு மட்டுமல்லாமல் வெளிநபர்களை அழைத்துக்கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
தென்மாவட்டத்தில் பல்வேறு ரவுடிகளின் கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. இவர்கள் தாங்கள் தான் பெரிய ஆள், கெத்து போன்ற பெயரை வாங்க கையில் வாள்,கத்தி, அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஜாதி சார்ந்த வீர வசனங்களை பேசும் வீடியோக்களை ரிலீஸ் ஆக வெளியிடுகிறார்கள் மேலும் இதனை பார்க்கும் மாணவர்கள் தங்களை ஹீரோவாக நினைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் மோதி கொள்கிறார்கள்.
மேலும் இதனாலேயே புத்தகப் பைகளில் புத்தகங்களை எடுத்துச் செல்ல வேண்டிய மாணவர்கள் ஆயுதங்கள் எடுத்துச் செல்கிறார்கள்.
இதனை மாணவர்களின் பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை. மாணவர்களின் இந்த மனநிலையை மாற்ற உரிய கவுன்சிலிங் எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.