கிரிக்கெட் : இன்று நடைபெற்ற வரும் குஜராத் மற்றும் டெல்லி இராணிகளுக்கு இடையேயான போட்டியில் பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது டெல்லி அணி.
நடைபெற்றுள்ள ஐ பி எல் தொடரின் 35 வது போட்டியான டெல்லி மற்றும் குஜராத் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் முதலில் குஜராத் அணி தாஸ் வென்று பௌலிங் செய்ய தேர்வு செய்தது. டெல்லி அணி முதலில் பேட்டிங் களமிறங்கி அதிரடியான தொடக்கத்தை தொடங்கியது. தொடக்கத்தில் அபிஷேக் போரல், கே எல் ராகுல் மற்றும் கருநாயக்க குறைவான பந்துகளில் அதிக ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தனர்.
இதனைத் தொடர்ந்து அக்சர் பட்டேல் மற்றும் ஸ்டப்ஸ் இணை சிறப்பாக விளையாட 20 ஓவர் முடிவில் அணியின் எண்ணிக்கை 203 என இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. அச்சர் பட்டேல் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்திருந்தார். குஜராத் அணியில் நான்கு ஓர்கள் வீசி நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் குஜராத் அணியின் வேக பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் அணி வெற்றிக்கனியை பறிக்குமா? இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு செல்லும்