மனைவி தற்கொலை வழக்கில் கோர்ட்டில் பத்தாண்டுகளாக ஆஜரகாமல் தலைமறைவாக இருந்த கார் டிரைவரை பெங்களூர் சென்று ஓமலூர் போலீசார் கைது செய்தனர். ஓமலூர் அருகே உள்ள பஞ்சிகாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் 15 வருடங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தை சேர்ந்த பத்மாவதி பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இருப்பினும் கடந்த 2015 ஆம் வருடம் அவருடைய மனைவி பத்மாவதி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வீட்டில் தீக்குளித்து இறந்துவிட்டார்.
இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் நாகராஜ் தான் காரணமாக இருந்துள்ளார் பத்மாவதி இறப்பதற்கு முக்கிய காரணம் என்று தெளிவாக தெரிய வந்தது .
இதனைத் தொடர்ந்து நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன் பின்னர் பினையில் வந்தவர் மீண்டும் வாய்தா தேதிகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் 10 ஆண்டுகளாக ஏமாற்றிக் கொண்டு வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பெங்களூர் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார் .அங்கும் கார் டிரைவராக வேலை செய்து இவருக்கும் இரண்டாவது மனைவிக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த பத்து வருடங்களாக வாய்த தேதியில் கோர்ட்டில் சரியான நேரத்தில் ஆஜராகாமல் இருந்தவரை, பெங்களூர் சென்று ஓமலூர் போலீஸ்சார் கைது செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ஓமலூர் கோட்டில் நாகராஜை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.