உணவு பொருள்களின் முக்கிய ஆதரங்களின் வகைகள்:
1.விவசாயம்:
மனிதனின் முக்கிய உணவு ஆதாரமாக வேளாண் உணவு விளங்குகிறது. உணவு தேவை அதிகரித்து விவசாய உற்பத்தி குறையும் போது பஞ்சம் ஏற்படும் நிலை தோன்றுகிறது. உணவு உற்பத்தி குறைவதற்கான மூன்று முக்கியமான காரணங்கள் உள்ளன ,அவை
1.மண்ணரிப்பு
2.பாலைவனமாக்கல்
3.பண்ணை நிலம் மாற்றம்
1.மண்ணரிப்பு :
மண்ணரிப்பு என்பது மண்ணின் செழுமையான மேற்பரப்பு நீக்கப்படுவதாகும் (அல்லது) அழிக்கப்படுவதாகும். இவை இயற்கை நிகழ்வின் வேகம் தாவரங்களையும் மரங்களையும் அழிப்பதால் அதிகரிக்கிறது. காற்றும் நீரும் தான் முக்கிய காரணிகளாக மண் அரிப்பிற்கு அமைகிறது. மண்ணு அரிப்பு ஏற்பட்ட இடத்தில் விவசாயம் மிக முக்கியமாக பாதிப்புக்குள்ளாகிறது.
2. பாலைவனமாக்கல்:
மழை பொழிவது தொடர்ந்து நின்று, நிலைத்தடி நீர் குறைந்து , காற்றின் ஈரப்பதமும் ,மண்ணின் ஈரப்பதமும் நீங்கி, வெப்ப காற்று தொடர்ந்து வீசும் இடங்களை பாலைவனம் என்று அறியப்படுகிறது. சுரங்க தொழில் போன்ற மனிதனின் செயல்களில் செழிப்பான நிலங்களை வறண்ட பூமி ஆக மாற்றுவதற்கு முக்கிய காரணமாகிறது. இதனால்தான் வறண்ட பூமியில் விவசாயம் செய்ய இயலாது.
பண்ணை நிலை மாற்றம்
வேளாண் பண்ணை நிலங்கள் உற்பத்தி பிறகு உபயோகங்களுக்காக மாற்றும் போது , பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. இந்த இடங்களில் விவசாயம் செய்ய இயலாது.