நல்ல சிவப்பு நிறத்துடன் கோழி கொண்டை போல் அழகாக சிறிய வடிவில் காணப்படும் பலம் தான் இலந்தை பழம்.
எல்லா காலத்திலும் கொடுக்கக்கூடிய பழத்தில் இரண்டு வகைகள் உள்ளது ஒரு வகையான பழம் புளிப்பாகவும் மற்றொரு வகையான பழம் இனிப்பாகவும் இருக்கும்.
கிராமப்புறத்தில் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய பழ வகைகளில் இதுவும் ஒன்று. ஆனால் அதை அளவோடு வந்தால் தான் உடலுக்கு நன்மைகள் தரும். இலந்தை பழத்தை வாங்கும் பொழுது நன்கு பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் இலந்தைப் பழத்தில் புழுக்கள் அதிகளவில் காணப்படும். பழத்தின் மீது துளைகள் இருந்தால் அதில் சில புழுக்கள் இருக்கும் அதனால் தான் இலந்தை பழத்தை பார்த்து வாங்கி வரவேண்டும். ஓரளவு சுண்ணாம்பு சத்து இரும்பு சத்து வைட்டமின் அ போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது.
இலந்தை பழத்தின் பயன்கள் :
இலந்தை பழம் சாப்பிட்டால் குமட்டல் மற்றும் வாந்தி உடனடியாக நிற்கும். இலந்தை பழம் சாப்பிடுவதால் பித்தத்தை தணிக்கும். இலந்தை பழம் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை குறைக்கும். அடிக்கடி வாயில் உமிழ்நீர் சுருப்பதை இலந்தை பழம் கட்டுப்படுத்தும்.
சிறுநீரக கோளாறு இலந்தை பழம் சீர்படுத்தும் தன்மை உடையது. அதிக பசியை உண்டாக்கும்.
இலந்தை பழம் சாப்பிடுவதால் உடல் வலியை போக்கக்கூடிய தன்மை உடையது. வாத நோய் உள்ளவர்களுக்கு பயன்படுகிறது. இலந்தை பழம் சாப்பிடுவதால் எலும்பு மற்றும் பற்கள் உறுதியாக காணப்படுகிறது.
காலை மாலை என இரு வேலையும் இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிட்டு வரலாம் உடனே வாந்தி மற்றும் குமட்டல் நிற்கும். பலருக்கு பசி என்றால் என்னவென்று தெரியாது நிலைமை உருவாகி இருக்கிறது. வயிறு எந்த நேரமும் மந்தமாகவே இருக்கும் அப்படிப்பட்டவர்கள் இலந்தை பலத்தை எடுத்து நான்கு அல்லது ஐந்து பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல பசியை ஏற்படுத்தும். இயற்கையில் கிடைக்கும் பல வகைகளில் இலந்தை பழமும் ஒன்று.
கிராமப்புறங்களில் அரிதாக காணப்படும் இலந்தை பழத்தை வாங்கி சாப்பிட்டு பயன் பெற வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.