27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய ஒரு கோவில் திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர் மற்றும் வடிவுடையம்மன் ஆலயம் ஆகும் இக்கோயில் தொன்மை மிக்கது ஏழு கலசங்கள் கொண்ட திருக்கோபுரம் உள்ளது ஆலயத்தில் வித்தியாசமாக மூன்று கொடி மரங்களை காணலாம் ஈசனுக்கு ஒன்று,வடிவ அம்மைக்கு ஒன்று,வட்டப்பாறை அம்மனுக்கு ஒன்று என்ற மூன்று கம்பங்கள் உள்ளது மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவான ஆதிபுரீஸ்வரர் புற்றுமணலான லிங்க ரூபத்தில் விளங்குகிறார்.
லிங்கம் கவசத்தால் மூடப்பட்டிருக்கும் கார்த்திகை பௌர்ணமி தொடங்கிய மூன்று நாட்கள் மட்டும் கவசம் திறந்து புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி தைலம் சாத்தப்பட்டு தரிசனம் தருவார். பிரம்மனை வலது புறமும் திருமாலை இடதுபுறமும் கொண்ட பரமசிவன் ஒற்றை பாதம் பதித்து மூன்று தெய்வங்களும் ஒரே சக்தியின் வடிவு என்பதை ஒரே சிற்பத்தில் திருக்காட்சியில் விளக்குகிறார் குருவுக்கு இழைத்து துரோகத்திற்காக சந்திரன் சாபம் விட்ட போது சாப விமோசனம் பெற அவனுடைய மனைவிகளான 27 நட்சத்திரக்காரர்களும் திருவொற்றியூர் வந்து பூஜை செய்து 27 நட்சத்திர லிங்கங்களும் இக்கோயில் வரிசையாக உள்ளன.
மனிதர்கள் வாழ்வில் துன்பங்களை அனுபவிப்பதற்கு கோள்களின் சுழற்சியை காரணம் என்பது ஜோதிடம் ஆனால் கோள்களின் தாக்கத்திலிருந்து நிவாரணமும் பெற முடியும் என்பது ஆன்மீகம் இப்படி ஆன்மீக துணை கொண்டு கிரகங்களினால் ஏற்படும் பாதங்களை நிவர்த்தி செய்து கொள்ள இந்த திருவெற்றியூர் திருத்தலம் உதவுகிறது இங்குள்ள 27 நட்சத்திர லிங்கங்களை பூஜை செய்வதன் மூலம் ஜாதகப்படி கிரகங்களால் சோதனை அனுபவிப்பக்கர்கள் அனுபவிப்பவர்கள் தாம் தமது நட்சத்திரநாளில் இருந்த கோவிலுக்கு வர வேண்டும்.
ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் ஒவ்வொரு லிங்க சன்னதி இருப்பதால் தம் நட்சத்திர சந்ததி முன்னால் போய் நின்று இறைவனை உளமாறு வணங்க வேண்டும் முன்கூட்டியே எடுத்து வந்திருக்கும் அர்ச்சனை பொருட்களை அர்ச்சகர் இடம் கொடுத்து தம் பெயர் நட்சத்திரம் மற்றும் பிரச்சனை சொல்லி அர்ச்சனை செய்து தருமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஜோதிடர் அறிவுறுத்தி இருக்கக்கூடிய அந்தந்த நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார நாணயத்தையும் கொண்டு வந்து இறைவனுக்கு நம் சமர்ப்பிக்க வேண்டும் ஒவ்வொரு மாதமும் வரும் தமது நட்சத்திரநாளில் இந்த கோவிலுக்கு வந்து தம் பிரச்சினை தீரும் வரை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் இதனால் அவர்களுக்கு சோதனை அகழ்வதோடு சகல சௌபாக்கியங்களும் வந்து செல்கிறது இவ்வாறு நன்மை பெற்றவர்கள் அடுத்தடுத்து தமது நட்சத்திர நாட்களில் இக்கோவிலுக்கு வந்து தன் நட்சத்திர லிங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும் அல்லது ஒவ்வொரு வருடமும் தம்முடைய ஜென்ம நட்சத்திர நாளான்றாவது வந்து நன்றி சொல்ல வேண்டும்.
18 சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார் திருவெற்றியூர் வந்து அம்மையப்பன் அருள் பெற்று கடற்கரை ஓரம் உயிரோடு ஜீவசமாதி ஆகி முக்தி பெற்றிருக்கிறார் இவ்வாறு எண்ணற்ற பெருமைகளை கொண்ட திருத்தலம் தான் திருவெற்றியூர் பௌர்ணமிகள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் அன்னையை தரிசிக்க பக்தர் கூட்டம் அலைமோதும் எனக் கூறுகிறார்கள்