cricket: நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மிக முக்கிய போட்டியாக பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் டெல்லி அணி படுதோல்வி அடைந்து வெளியேறியது.ய்
நடைபெற்று வரும் ஐ பி எல் தொடர் சிறப்பாக யாரும் எதிர் பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ப்ளே ஆப் ஏற்கனவே மூன்று அணிகள் தகுதி பெற்ற நிலையில் நான்காவது இடத்தில் யார் தகுதி பெறுவது என நடைபெற்ற முக்கிய போட்டி நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் மும்பை இரு அணிகளில் வெற்றி பெரும் அணி தகுதி பெரும். தோல்வி அடையும் அணி வெளியேறும் என தொடங்கியது இந்த போட்டி.
முதலில் டெல்லி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்த நிலையில், தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்துடன் விளையாடிய நிலையில் 19 வது ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறியது.
இந்த ஆண்டு ipl தொடரில் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த டெல்லி அணி இறுதியில் தொடர் தோல்விகளால் இந்த ஆண்டு ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் அதிரடியாக விளையாடி மும்பை அணி தொடர் வெற்றிகளால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.