மொபைல் செயலி மூலம் பணம் அனுப்புவது மற்றும் பணம் எடுப்பது என ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க புதிய வசதிகள் வந்துள்ளது. ஆன்லைனில் பணம் மாற்றங்கள் அதிகமானதால் தற்போது இந்தியாவில் ஆன்லைன் பண மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் முறையில் பணம் அனுப்பும்போது பல முறைகளில் மோசடிகள் நடைபெறுகிறது. டிஜிட்டல் பண மோசடி குறித்த விழிப்புணர்வு தொலைத்தொடர்பு துறை சைபர் மோசடியை எதிர்த்துப் போராடுவதற்காக டிஜிட்டல் நுண்ணறிவு தளத்தில் உருவாக்கப்பட்ட நிகழ் நேர எச்சரிக்கை பொறி முறையான நிதி மோசடி ஆபத்து குறிகாட்டி (FRI) வெளியிட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான மொபைல் எண்கள் கண்டறிவதன் மூலம் வங்கிகள் அல்லது வங்கியில்லா நிதி நிறுவனங்களின் கூகுள் பே,போன் பே மற்றும் பேடிஎம் போன்ற UPI செயலிகள் மோசடிகளை கண்டறிய புதிய கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது இந்தியாவில் நடக்கும் சைபர் மோசடியை எதிர்த்து போராடுவதற்கான பெரிய நடவடிக்கை என்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். மேலும் கவாச் பாதுகாப்பு மூலம் மோசடிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு எதிரான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறோம்.
சைபர் மோசடி எதிர் எதிர்த்து போராடுவதற்கான நிதி மோசடி ஆபத்துக்கு குறியீட்டை (FRI) அறிமுகப்படுத்தியுள்ளோம். FRI என்ற அளவீடு நிதி மோசடிக்கு நடுத்தர உயர் அல்லது மிக அதிக ஆபத்து பட்டியலிட்டு காட்டக் கூடியது. இதன் மூலம் உடனடியாக ஆபத்து மதிப்பீட்டை பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளும். சைபர் குற்றவாளிகள் மொபைல் நம்பரை செயலிழக்க செய்வதற்கு மீண்டும் சரிபார்க்கப்படுவதை முன்பு சில நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
சந்தேகத்திற்கு இடமான மொபைல் நம்பர்களை குறியீடு முன்னெச்சரிக்கை அமைப்பு முழு சரிபார்ப்பு முடிவதற்கு முன்பே (FRI) இந்த இடைவெளியை நிரப்புவது வேலையாகும். 90 சதவீதத்திற்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகள் கொண்ட போன் பே,கூகுள் பே,பேடிஎம் போன்ற தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மோசடி தடுப்பது குறித்த புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.