வெற்றியாட்டம் ஆடிய மிட்செல் மார்ஷ்!!  குஜராத்தை ஓடவிட்ட லக்னோ!!

Mitchell Marsh played the winning game

கிரிக்கெட்: நடைபெற்று வரும் ஐ பி எல் தொடரில் நேற்று லக்னோ மற்றும் குஜராத் இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி அபாரமாக விளையாடி வெற்றியை பதிவு செய்தது.

இந்த ஆண்டு தொடங்கிய ஐ பி எல் தொடரில் தொடக்கம் முதலே எதிர் பாரத விதமாக பல திருப்பங்களுடன் போட்டி நடைபெற்று வருகிறது. மேலும் அதனை தொடர்ந்து இடையே பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டி நடைபெறாமல் இடையில் நிறுத்தப்பட்டது. அதன் பின் மீண்டும் 17 ம் தேதி தொடங்கியது இந்த போட்டி.

ஏற்கனவே 4 அணிகள் பிளே ஆப் தகுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்நிலையில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து களமிறங்கியது. மேலும் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்ஷ் 117 ரன்கள் குவித்தார். பூரான் 57 ரன்கள் அடித்திருந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி முடிந்த வரை போராடி 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் மிட்செல் மார்ஷ் அபாரமான ஆட்டத்தால் இமாலய இலக்கை நிர்ணயித்தது லக்னோ அணி அதனால் வெற்றியை பதிவு செய்தது. இன்று பெங்களூரு மற்றும்  ஹைதராபாத் இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram