விமானங்களுக்கான புது ரூட் ரெடி!! இண்டிகோ  பிளானுக்கு மேல் பிளான்!!

Plan above Indigo plan

புதிய வழித்தடங்களில் சேலம் விமான நிலையத்தில் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது இந்திய ஆன்லைன் நிறுவனம். தமிழகத்தின் மேற்கு மண்டபத்தில் உள்ள முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்று சேலம் மாவட்டம் ஆகும்.  கடந்த 1993 ஆம் ஆண்டு சேலம் விமான நிலையம் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இருந்து 19 ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கமலாபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ளது.

2000 ஆம் ஆண்டில் போதிய வரவேற்பு இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. பல்வேறு சிக்கல்களை தாண்டி 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசின் திட்டத்தின் படி விமான சேவை தொடங்கப்பட்டது.ட்ரூட்ஜெட் அல்லையன்ஸ் ஆர் போன்ற நிறுவனங்கள் போன்று இண்டிகோ நிறுவனம் தற்போது விமானங்களை இயக்கி வருகிறது.

பெங்களூர் ஹைதராபாத் சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு மூன்று நாட்களுக்கு தினசரி இன்றிக்கும் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இன்டிகோ நிறுவனம். இந்த விமான சேவையின் வழங்குவதன் மூலம் 83 ஒரு நாட்டு நகரங்கள் மற்றும் 11 சர்வதேச நகரங்கள் உடனான இணைப்பை பெற முடிகிறது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு தினசரி மட்டுமின்றி செவ்வாய் வியாழன் சனி ஆகிய மூன்று நாட்களுக்கு கூடுதல் விமான சேவை வழங்கப்படுகிறது. மேலும்   சேலம் கொச்சி விமான சேவையை அலையன்ஸ் நிறுவனம் தொடங்கி வருகிறது. தமிழகத்தில் மதுரை கோவை திருச்சி சென்னை தூத்துக்குடி போன்ற விமான நிலையம் அருளுடன் சேலம் மாவட்டம் பிசியான விமான நிலையமாக திகழ்கிறது.

சர்வேயின் படி ஐந்தாவது பெரிய விமான நிலையம் சேலம் விமான நிலையம் ஆகும்.    ஏடிஆர் 72 ஏ ஆர் பஸ் 320 போன்ற விமான வகைகளைக் கொண்டு ஏங்கி வருகிறது. இந்த விமான நிலையத்தில் நான்கு ஏ டி ஆர் 72 விமானங்கள் அல்லது இரண்டு ஏர்பஸ் ஏ 320 வகை விமானங்களை நிறுத்தக்கூடிய அளவிற்கு பெரிய விமான நிலையம் ஆகும். மேலும் அதிகபட்சமாக 100 விமான பயணிகள் வரை கையாள கூடிய திறன் உடையது.

இரண்டு பிளையிங் பள்ளிகள் மற்றும் ஒரு பைலட் பயிற்சி அகாடமி போன்றவை சேலம் விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. சேலத்தில் இருந்து சென்னை, ஹைதராபாத் பெங்களூர் போன்ற இடங்களுக்கு செல்லும் பயணிகள் விமானத்தில் 300 கிலோ வரை லக்கேஜ்களை ஏற்றி செல்லும் வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைக்கு மட்டும் சேலத்தில் இருந்து தினசரி இரண்டாவது விமான சேவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு சேலம் எம்பி ஆக இருந்து பார்த்திபன் இது தொடர்பாக சில கோரிக்கைகளை வைத்தார்கள் அதன்படி சேலத்தில் இருந்து திருப்பதி சீரடி போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இன்னும் பரிசீலனை தான் உள்ளது. கோழிக்கோடு திருவனந்தபுரம் புதுச்சேரி திருச்சி மதுரை தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு விமான சேவையை இயக்கினால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

மேலும் சேலம் விமான நிலையத்தில் இருக்கும் ரன்வினை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ஏர்பஸ் ஏ 321 வரை விமானங்கள் இருக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது. விமான சேவைக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதால்  உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவே விமான சேவையில் காலதாமதம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram