ஒரே இரவில் 37 ஆயிரம் பேரின் குடியுரிமையை பறித்த குவைத் அரசு!! இது முதல் முறை அல்ல!

Kuwaiti government revokes citizenship

குவைத்: மத்திய கிழக்கு நாடுகளில் முக்கிய நாடான குவைத்தில் பல ஆயிரம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டி நாடு தான் குவைத். குவைத் ஈராக்கிற்கும் சவுதிக்கும் இடையில் அமைந்துள்ள நாடாகும். இந்த நாட்டில் 50 லட்சத்துக்கும் கீழ் தான் மக்கள் தொகை உள்ளது. மற்ற நாடுகளைப் போலவே குவைத்திலும் பல லட்சம் பேர் வேலைக்காக தங்கி இருக்கிறார்கள்.

 37 ஆயிரம் பேரின் குடியுரிமை பறிப்பு: தற்போது திடீரென 37 ஆயிரம் பேரின் குடியுரிமை ஒரே இரவில் குவைத் அரசு பறிக்கப்பட்டுள்ளது. பறிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனார் பெண்கள் என கூறப்படுகிறது. குடியுரிமையை இழந்த பெண்களில் ஒருவர் லாமா என்பவர். நேற்று வரை குவைத் குடிமகளாக இருந்தவர் இப்பொழுது நாடற்ற நபராக இருக்கிறார் லாமா.
எந்தஒரு கம்யூனிகேஷனிலும் குடியுரிமை ரத்து என்று அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்றும் வெளியே சென்று இருந்த லாமா கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த முயன்ற போது அதனை ஏற்கவில்லை. மேலும் விசாரித்ததில் திருமணத்தின் மூலம் பெறப்பட்ட அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டதால் வங்கி கணக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றும் லாமா தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில் எனக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது.
நான் கடந்த 20 ஆண்டுகளாக வைத்து வாழ்ந்து வருகிறேன். அது மட்டுமல்லாமல் எல்லா விதிகளையும் பின்பற்றக்கூடிய குடிமகளாக வாழ்ந்து உள்ளேன். திடீரென குடியுரிமை ரத்து செய்தது சரியான போக்கு இல்லை என்றும்  லாமா வருத்தம் தெரிவித்து இருந்தார். முக்கிய காரணம்: 2023 டிசம்பரில் ஆட்சிக்கு வந்த அமீர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல் சபா குவைத்தில்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். நாடாளுமன்றத்தை கலைத்து  தற்காலிகமாக சில பகுதிகளை அரசியல் அமைப்பில் நிறுத்தி வைத்திருப்பதாகவும் அறிவித்தார்.
மேலும் உண்மையான மக்களுக்கு சுத்தமாகவும்,அசுத்தங்களிலிருந்து குவைத்தை விடுவிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். அவரது நிலைப்பாடு குவைத் குடிமக்களுடன் இரத்த உறவுகளை கொண்டவர்களுக்கு மட்டுமே குவைத் சொந்தம் என்று பிறகு தெரியவந்தது.
தொடரும் குடியுரிமை ரத்து:
கடந்த மாதங்களில் மட்டும் 20 ஆயிரம் பெண்கள் உள்ளிட்ட 37 ஆயிரம் பேரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது குவைத் அரசு. குடியுரிமை ரத்து செய்யும் நடவடிக்கையில் இது முதல் முறை அல்ல. கடந்த 1961 பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற போது இதே போன்று ஒரு லட்சம் பேருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram