ரெட் அலர்ட் எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா!! பருவமழை எச்சரிக்கை!!

Monsoon warning

சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். மே 24 (சனிக்கிழமை) முதல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை கொட்டத் தொடங்கியது.

அதன்படி கோவை,நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் திங்கட்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை,குமரி, நீலகிரி, கோவை, அரியலூர், தென்காசி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் போன்ற இடங்களுக்கு மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தர்மபுரி, திண்டுக்கல், புதுக்கோட்டை போன்ற 12 மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். நெல்லை, தேனி, குமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை தொடங்கிய பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கேரளா போன்ற தமிழகத்தை ஒட்டிய மாநிலங்களிலும்  பெய்து வருகிறது.இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram