பெங்களூரு: உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் “தக் லைஃப்”. இந்தப் படத்தை இயக்குனர். மணிரத்னம் இயக்கி உருவாக்கியுள்ளார். இப்படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. த்ரிஷா, சிம்பு, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்ய லட்சுமி, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், வரும் ஜூன் 5ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போஸ்டர்களை கிழித்து வீசப்பட்டுள்ளனர் .
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த 24ஆம் தேதி சென்னையில் புறநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவண்ணா என அழைக்கப்படும் சிவராஜ் குமார் கலந்து கொண்டார். இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முதன் முதலாக சிவராஜ்குமார் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கடைசியாக பேசிய இப்படத்தின் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், கர்நாடகாவில் இருக்கும் எனது குடும்பம் தான் சிவராஜ் குமாரின் குடும்பம். நான் அவருக்கு சித்தப்பா. அதனால் தான் அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். நான் எனது உரையை தொடங்கும் போது உயிரே, உறவே, தமிழே என்று ஆரம்பிக்கிறேன். தமிழில் இருந்து தோன்றியதுதான் கன்னட மொழி. அதனால் நீங்களும் அதில் ஈடுபடுவீர்கள் என்று கூறியுள்ளார். கன்னட அமைப்பினர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், தப் லைஃப் படத்தின் போஸ்டர்களை கர்நாடகாவில் எங்கு எல்லாம் ஒட்டப்பட்டுள்ளதோ அவற்றையெல்லாம் நீக்கி கிழித்து வருகிறார்கள். கமல்ஹாசன் பிரபல ஊடகங்களிடம் பேசும் போது, “தமிழ் மொழி பிறந்த பிறகுதான் கன்னட மொழி பிறந்தது என்றும்,தமிழ் தான் சிறந்த கன்னடத்தை விட சிறந்தது” எனவும் பேசியுள்ளார். மேலும், எங்கள் மொழியை அவமதித்த உங்கள் மீது கருப்பு மை பூச நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், நீங்கள் ஓடி விட்டீர்கள். கர்நாடகாவிற்கும், எங்கள் கன்னட மொழிக்கும், மக்களுக்கும் எதிராக பேசினால் உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், உங்கள் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது என்றும் கன்னட அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.