இந்த சீன் லாம்  என்கிட்ட வேணா!! ஜித்தேஷை சீண்டிய திக்வேஷ்?? அடுத்த நொடியே நடந்த சம்பவம்!! 

Digwesh scolds Jitesh

cricket: நேற்று நடைபெற்ற பெங்களுரு மற்றும் லக்னோ இடையிலான போட்டியில் பெங்களுரு அணி அபார வெற்றி. ஜித்தேஷ் ஷர்மா அபார ஆட்டம்.

நடைபெற்று வரும் ipl தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் பெங்களூர் அணி மற்றும் லக்னோ இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் பெங்களுரு அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 227 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி 18.4 ஓவரில் 230 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்து. இதில் விராத் கோலி அரைசதம் விளாசினார். ஜித்தேஷ் ஷர்மா 85 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்மிலக்காமல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதில்  16 வது ஓவரை லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ராதி வீச வந்தார். முதல் பந்தினை எதிர் கொண்ட ஜித்தேஷ் ஷர்மா முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க திக்வேஷ் தரையில் எழுதுவது போல அவரது செலப்ரேசனை வெளிபடுத்த அடுத்த நொடியே நோ பால் கொடுத்தார் அம்பையர்.

ஜித்தேஷ் ஷர்மா அடுத்து வீசிய பந்தினை சிக்ஸ் அடித்து பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. புள்ளி பட்டியலில் பெங்களுரு அணி தற்போது இரண்டாவது இடத்தில உள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram