விஸ்வரூபமெடுக்கும் கொரோனா..சைலண்ட் மாரடைப்புக்கான எச்சரிக்கை!! ஐஐடி அதிர்ச்சி தகவல்!!

A warning of a silent heart attack

இந்தூர்: தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது. மேலும், சில மரணங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடத்தப்பட்ட ஆய்வில் டெல்டா வகை கொரோனாவானது சைலன்ட் மாரடைப்பை ஏற்படுத்தும் என்பது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனாவானது சில ஆண்டுகள் நம்மை ஆட்டிப் படைத்தது மற்றும் பலரது உயிரை காவு வாங்கியது. குறிப்பாக இரண்டாவது அலையின் போது பாதிப்புகள் அதிகம்.

மேலும், உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தது. பாதுகாப்பு துறையின் விதிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் மூலம் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே ஆயிரத்தை  கடந்துள்ளது கொரோனா பரவல். தெற்கு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது.
இந்தூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தியதில் டெல்டா கொரோனா வைரஸ் வகை சைலண்ட் மாரடைப்பு ஏற்படுத்தும் என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, டெல்டா கொரோனா வைரஸானது தைராய்டு பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதை தெரிவித்துள்ளது. புரோட்டியம் ஆராய்ச்சி இதழில் வெளியான செய்தியில் எந்த மாதிரியான சிகிச்சை சரியாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. மொத்த 3,134 நோயாளிகளின் டேட்டாக்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி 1 மற்றும் 2 ஆம் அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என கொரோனா வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதீத பாதிப்பை ஏற்படுத்தும் டெல்டா வகை கொரோனா பயோகெமிக்கல் பேலன்ஸை அதிகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. டெல்டா மாறுபாடு சமநிலையில் சீர்குலைக்கும் என்றும், கேட்டிகோலமைன்  மற்றும் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. தைராய்டு பிரச்சனைகள் மற்றும் சைலன்ட் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை விளைவிக்கும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram