சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்கள் கவரும் வகையில் கடந்த 30 நாட்களில் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்களின் பல கோரிக்கைகளை ஏற்று அதன்படி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது அரசு ஊழியர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தொழிற்கல்விக்கான முன்பணம் 1 லட்சம் ஆகவும், மேலும், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு ரூ. 50,000 உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
திருமணத்திற்கு முன் பணம் ரூ. 5 லட்சம் ஆக வழங்கப்படும். மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிக்கான பருவத்தில் கணக்கு எடுத்துக் கொள்ளப்படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ. 4000 லிருந்து 6000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை ரூ. 500 லிருந்து 1000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
7 வது ஊதிய குழுவின் கீழ் அரசு பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18000 நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி ஊழியர்களுக்கு 360 ரூபாய் அதாவது ரெண்டு சதவீதம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு பண்டிகை காலம் முன்பணமாக 10000 லிருந்து 20000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 2000 உயர்த்தி ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும். 50,000 விவசாய குடும்பங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆயுள் காப்பீடு விபத்து காப்பீடு போன்றவை அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு கட்டணம் இன்றி வழங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை என்று நடத்தப்பட்டது. இதற்கு அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். அதில் ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும்.
மேலும், போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு மேற்கொள்ளப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற அறிவிப்புகள் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களை கவரும் வகையில் வெளியிட்டது அரசு ஊழியர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.





