சாதி என்பது போதை பொருள் போன்றது!! தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பேச்சு!!

Tvk leader Vijay's fiery speech

இன்று தவெக தலைவர் சென்னையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். விழாவில் அனைவருக்கும் பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்  மாணவர்களிடையே பேசிய அவர் பல கருத்துக்களை முன் வைத்தார். அதில் அவர் கூறுகையில், பணம் வாங்கிகொண்டு ஒட்டு போட வேண்டாம், அந்த பணம் உங்ககிட்ட இருந்து கொள்ளை அடிச்ச பணம் தான்.

 

என்ன பண்ண போறீங்க? மை டியர் பேரண்ட்ஸ் உங்ககிட்ட ஒரு சின்ன ரெக்வெஸ்ட்!  உங்க குழந்தைகளோட விஷயத்துல இதுலயும் எதுலயும் போர்ஸ் பண்ணாதீங்க பிரஷர் போடாதீங்க. அவங்களுக்கு என்ன புடிச்சிருக்கு என்று தெரிந்துகொண்டு அதுக்கு ஏத்த மாதிரி வழி நடத்துங்க நான் டெஃபனட்டா சொல்றேன் எத்தனை தடைகள் வந்தாலும் அவங்க அவங்களுக்கு பிடிச்ச விஷயத்துல அவங்க அவங்களுக்கு பிடிச்ச துறையில அவங்க கண்டிப்பா சாதித்து காட்டுவாங்க.

 

இன்னொரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட நான் ஷேர் பண்ணனும்னு நினைச்சது என்னன்னா இந்த சாதி மதத்தை வைத்து இந்த பிரிவினை வளர்க்கிற அந்த சிந்தனை பக்கமே போயிடாதீங்க!!  அந்த சிந்தனை வேணாம்.  விவசாயிகள் என்ன சாதி மதம் பார்த்த பொருளை விலைவிக்கிறாங்க? தொழிலாளர்கள் என்ன சாதி மதம் பார்த்த பொருளை உற்பத்தியில் ஈடுபடுறாங்க? இவ்வளவு ஏன் இயற்கை அம்சங்களான வெயில் மழையில சாதி இருக்கா? மதம் இருக்கா?

 

எப்படி இந்த போதை பொருட்களை எப்படி நாம் அறவே ஒதுக்கி வைக்கிறோமோ அதே மாதிரி இந்த சாதி மதத்தையும் ஒதுக்கி வச்சிருக்கீங்க. அதுதான் எல்லாத்துக்கும் எல்லாருக்குமே நல்லது. ரீசன் டைம்ல பாத்தீங்கன்னா தந்தை பெரியார் அவர்களுக்கு சாதி சாயம் பூச ட்ரை பண்றாங்க ஒன்றிய சிவில் சர்வீஸ் எக்ஸாம்ல கூட சாதி சாயம் பூசுற மாதிரி ஒரு கேள்வி ஒன்னு கேட்டு வெச்சிருக்காங்க. இது போன்ற சாதி உள்ளிழுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram