cricket: நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு இடையில் முதல் குவாலிபயர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில் களத்தில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டிற்கான ipl போட்டி தொடர் இறுதி போட்டியை நெருங்கி வரும் நிலையில் நேற்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பெங்களூரு அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய தேர்வு செய்தது. முதில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி இந்த தொடரில் இதுவரை இல்லாத ஒரு சொதப்பலான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
இந்த சொதப்பலான ஆட்டத்தின் காரணமாகவே பஞ்சாப் அணி 14.1 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு சுருண்டது. இதில் சுயஸ் ஷர்மா , ஹெசில்வுட் தலா 3 விக்கெட்டுகளும், யஷ் தயாள் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய பெங்களுரு 10 ஓவர்களில் இலக்கை எட்டி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியின் நடுவேதான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இம்பேக்ட் வீரராக முசீர் கானை களமிறக்கியது பஞ்சாப் அணி. அவர் களமிறங்கிய போது பின் நின்றுகொண்டிருந்த விராட் கோலி இவன் எனக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு வந்தவன் என்பது போல கூறியதாக கூறப்படுகிறது.
இவனையெல்லாம் பஞ்சாப் களமிறக்குகிறது என அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் விராட் கோலியை பலரும் சமூக வலைதளங்களில் திட்டி வருகின்றனர். மற்றொரு பக்கம் அவர்கள் சகோதரர்கள் போறவர்கள் அவர்களுக்குள் இது சகஜமாக இருக்கலாம் அதை இவ்வாறு மாற்றி சமூக வலைதளங்களில் பரப்புகின்றன என ரசிகர்கள் மறுபுறம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





