சென்னை : மழைக் காலங்களில் நீரை அணையில் சேமித்து பிறகு அதை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறது நீர்மின் நிலையம். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் மாத தொடக்கத்தில் 100 மெகாவாட்டுக்கு குறைவாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, தென்மேற்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழைநீரை சேகரித்து வைத்து அவற்றை மின்சாரமாக மாற்றி வருகிறது. அதன்படி, ஈரோடு, கோவை, திருநெல்வேலி, நீலகிரி போன்ற மாவட்டங்களில் மட்டும் 47 மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து மொத்தம் 2,321 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். நாள் தோறும் 750 முதல் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இம்மாத தொடக்கத்தில் தண்ணீர் வரத்து குறைந்ததால் மின்சார உற்பத்தி 100 மெகாவாட்டுக்கும் குறைவாக இருந்தது. தமிழ்நாடு நீர்மின் வாரியமானது நீர்மின் உற்பத்தி குறைந்ததால் மாதத்தில் இருமுறை மின்தடை அறிவித்தது.
வளிமண்டல காற்றழுத்த காரணமாக, தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றன.இதனால், நீலகிரி ஆணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் நீர் மின் உற்பத்தி 1000 மெகாவாட் மேலாக அதிகரித்தது. நீலகிரி குந்தா தாலுகாவில் மட்டும் 831 மெகா வாட் கொண்ட 12 நிலையங்களில் 550 மெகாவாட் மின்சாரம் 24 மணி நேரத்திற்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க கூடும். அதனால், நீர் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என தமிழ்நாடு நீர் மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு ஜிகா வாட் மேலாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.