பிரம்மோஸ் னா சும்மாவா!! இந்தியாவின் அடுத்த பிக் பிளான்ஸ்!!

Is Brahmos okay!! India's next big plan!!

 

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் மோதலில் இப்போது அதிநவீன ஆயுதமான பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்தி தாக்கி வருகிறது. ஆபரேஷன் சிந்தூரில் பிரம்மோஸ் முக்கிய பங்கு விதித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தி 5 மிகப்பெரிய திட்டங்களை தீட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலில் முக்கிய பங்காற்றியது பிரம்மாஸ் ஏவுகணை ஆகும். பிரம்மோஸ் பாகிஸ்தானை சரணடைய வைத்து குறிப்பிடத்தக்கது. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து ஏவுகணையில் மேலும் அதன் தரத்தை உயர்த்தியுள்ளது. தற்போது இந்தியாவிலேயே பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

1. பிரம்மாஸ் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலில் இருந்து செயல்படுத்த முடியாது. ஆனால், இந்தியா தற்போது நீர்மூழ்கி கப்பலில் இருந்து செயல்படுத்தக்கூடிய தரத்தை சேர்த்து பிரமோஸ் ஏவுகணையை தயாரித்து வருகிறது.

2. பிரம்மோ சேவுகணை 400 கிலோமீட்டர் வரை இலக்கை சென்று தாக்கக் கூடியது. மேலும், 800 கிலோ மீட்டர் வரை இலக்கை சென்று தாக்கும் திறனை உயர்த்தும் பணி நடந்து வருகிறது.
3. ஆராய்ச்சியாளர்கள், ரஃபேல் உள்ளிட்ட ஜெட் விமானங்கள் எளிதாக பிரம்மோஸ் செய்யவுகணையை எடுத்துச் செல்லுமாறு சிறிய ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
4. பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை இந்தியா தற்போது வரை வழங்கிவருகிறது. வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய நாடுகளும் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். கூடிய விரைவில் ஏற்றுமதி ஆரம்பிக்கும் என தெரிகிறது.
5. பிரமோஸ் ஏவுகணையால் ஒலியை விட 3 மடங்கு  மட்டுமே வேகமாக செல்லக்கூடியது. இப்போது 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் பிரம்மோஸை  செயல்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram