18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது மற்றும் விதிமுறை ஜூன் 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
மேலும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூபாய் 25000 அபராதமும் 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் அளிக்கும் வகையில் விதிமுறைகளை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் சாலைகளில் குறிப்பிட்ட வேகத்துக்கு அதிகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கும் ரூபாய் ஆயிரம் முதல் 2000 வரை அபராதம் சில சமீப காலமாக விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்குபவர்களால் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கிறது இதனால் உயிர் சேதம் அதிகமாக உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சொகுசு காரை மது போதையில் ஓட்டிய சிறுவன் ஒருவனால் இருவர் உயிர் இழந்துள்ளார் இது நாடு முழுவதும் முக்கிய பேசுபொருளாக மாறி உள்ளது.
இதை போன்று இனி நடக்க கூடாது என்று போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை மத்திய போக்குவரத்து துறை கொண்டு வந்துள்ளது.
ஜூன் 1 தேதி முதல் இந்த விதிமுறைகள் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் எவ்வித வாகனத்தை ஓட்டினாலும் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறைக்கு செல்லும் தண்டனையும் ரூபாய் 25000 அபாராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகம் செல்வதற்கு பதிலாக தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பயிற்சி பள்ளிகளில் ஓட்டுநர் உரிமம் தேர்வு நடத்த விரும்புவோர் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும் என்றும் நான்கு சக்கர பயிற்சி பள்ளிகளில் இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருந்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது